குஜராத்துடன் இன்று மோதல் பிளே ஆப் சுற்றில் நீடிக்க பெங்களூரு ஆயத்தம்
2022-05-19@ 15:57:49

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள 67-வது லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்ரேட்டில் பின்தங்கி இருக்கும் பெங்களூரு இன்றைய ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதே நேரத்தில் டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தால் அந்த அணி எவ்வித சிரமமும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். அதுமட்டுமில்லாமல் பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய்விடும்.
பெங்களூரு அணி தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய சூழல்தான் வரும். எனவே இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடியில் பெங்களூரு களம் இறங்குகிறது. அறிமுக அணியான குஜராத் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே அந்த அணி இன்று எந்தவித பதற்றமும் இன்றி ஆடும். ஏற்கெனவே குஜராத் அணி பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்குபதிலடி கொடுத்து பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க பெங்களூரு அணி இன்று கடுமையாக மல்லுக்கட்ட ஆயத்தமாக உள்ளது. குஜராத்தும் எளிதில் விடாது என்பதே உண்மை.
மேலும் செய்திகள்
வெளியானது அட்டவணை
விலகினார் ஹலேப்: பைனலில் பியான்கா
உறுதியான ஊக்கமருந்து சோதனை: இந்திய ரக்பி வீராங்கனைக்கு தடை
யாஷ் துபே, சுபம் சர்மா சதங்களால் வலுவான நிலையில் மபி
இன்று 2வது மகளிர் டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா
முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!