SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு

2022-05-19@ 15:49:29

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நேற்று மாலை பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுகுமாரன், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாநில தகவல் தொழில்நுட்ப உறுப்பினர் சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ்ராஜ், கி.வே.ஆனந்தகுமார், ஜெ.மூர்த்தி, மணிபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசுகையில், பால்வளத்துறை அமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இலக்கணம் ராஜேந்திர பாலாஜி. தற்போது திமுக அரசில் பெண்கள் அரசு பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது ஓராண்டு சாதனையின் உதாரணம். இலங்கையில் உணவின்றி தவிக்கும் சிங்களர்கள், தமிழர்களுக்கு கப்பல் நிறைய உணவுப்பொருட்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.அன்னை தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என கையெழுத்திட்டது திமுக அரசின் ஓராண்டு சாதனை. மேலும், கடந்த ஓராண்டில் திராவிட மாடல் ஆட்சியே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று திண்டுக்கல் லியோனி பெருமிதமாக தெரிவித்தார். இதில் மீஞ்சூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொறுப்பு குழு நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்