எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வதுடன் பேரறிவாளன் சந்திப்பு: தாய் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்..!
2022-05-19@ 09:33:41

சென்னை : உச்ச நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழக முன்னாள் முதல்வரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, தனது தாய் அற்புதம்மாள் உடன் நேரில் சென்று சந்தித்தார். அப்போது தனது விடுதலைக்கு ஆதரவு அளித்ததற்காக பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது விடுதலையைத் தொடர்ந்து அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பேரறிவாளனிடம் எடப்பாடி பழனிசாமி உரையாடினார். இதே போன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ பன்னீர் செல்வத்தையும் பேரறிவாளன் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம்,' பேரறிவாளனை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஒரு மாநில முதலமைச்சருக்கு இருக்கும் உரிமை என்ன என்பதை பேரறிவாளன் விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிரூபித்து தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பபட்டது. அதற்கு முழு காரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான். பல்வேறு கட்டங்களிளில் என்னென்ன தீர்மானம் எடுத்தார்கள் என்பதெல்லாம் ஒரு வரலாற்று உண்மை,'என்று கூறினார்.
மேலும் செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் தெருவுக்கு 3 பேர் என 300 இடங்களில் தொற்று பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சமூக நலன், மகளிர் உரிமை துறையில் 3 திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
உள்ளகரத்தில் மெட்ரோ பணிக்காக தோண்டிய பாதாள சாக்கடையில் மண் சரிந்து தொழிலாளி பலி
சாலையோரம் வசிப்பவர்கள் இரவு நேர காப்பகங்களை பயன்படுத்த அறிவுரை சென்னை மாநகராட்சியில் புதிதாக 28 நகர்ப்புற வீடற்றோர் காப்பகம்: பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;