மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
2022-05-19@ 02:25:24

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் நாட்டார் பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (51). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று காலை மேல்மாயிலில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ வாங்கி படிக்கட்டில் அமர்ந்து குடித்துள்ளார். பின்னர், அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்து எழுந்து நின்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து குடும்பத்தினர் வந்து கதறி அழுதனர். வெங்கடேசனுக்கு கல்லூரி படிப்பை முடித்த நிவேதா(22) என்ற மகளும், கே.வி.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நிகிலா(15) என்ற மகளும் உள்ளனர். இருவரும் தந்ைதயின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.இந்த நிலையிலும், 2வது மகள் நிகிலா தனது மனதை தேற்றிக்கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். \”நன்றாக படிக்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்’’ என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
ஊட்டி - கோத்தகிரி சாலை கோடப்பமந்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்
உடன்குடியில் அனல்மின் நிலையம் துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்
குலசையில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மோட்டார் வாகன சட்டத்தை மீறினால் கடும்நடவடிக்கை : எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை
காரைக்குடி அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி கண்மாய் நிலம் மீட்பு: முதல்வர் தனிப்பிரிவு புகார் மீது அதிரடி நடவடிக்கை
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுண்ணாம்பு நிரம்பிய பானை கண்டெடுப்பு
50 ஆண்டுக்கு மேல் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம்?.: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் விளக்கம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!