பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
2022-05-19@ 00:17:36

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு, வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
Tags:
Perarivalan Liberation White cloth Congressman Today Charity KS Alagiri பேரறிவாளன் விடுதலை வெள்ளைத்துணி காங்கிரசார் இன்று அறப்போராட்டம் கே.எஸ்.அழகிரிமேலும் செய்திகள்
அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!