பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
2022-05-19@ 00:17:13

சென்னை: சென்னை தியாகராஜ நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று நிருபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாய் அற்புதம் அம்மாள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, அவரது கண்ணீர் வீண் போகவில்லை. அவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், வரும் 26ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு பேசினார். மேலும், வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளார்.
Tags:
Petrol diesel prices hike 26th e. Comm. Struggle National General Secretary D. Raja பெட்ரோல் டீசல் விலை உயர்வை 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம் தேசிய பொது செயலாளர் டி.ராஜாமேலும் செய்திகள்
தலைமை கழகத்தை கைப்பேற்றுவேன் என சசிகலா பேச்சு எதிரொலி; அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிப்பு: குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி: பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு
தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
அண்ணாமலை உருண்டு புரண்டாலும் பாஜ மீதான மக்கள் கோபம் குறையாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..