பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்
2022-05-18@ 20:52:49

டெல்லி: பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை உச்சநீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் , பி.ஆர். கவாய், ஏ.எஸ். கோபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வின் தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம், சிறை & பரோலில் நன்னடத்தை, அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய், அவர் பெற்ற கல்வித் தகுதிகள், கவர்னரின் இரண்டரை ஆண்டு தாமதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரமான 142ஐ பயன்படுத்தி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை முடிவு மீது கவர்னர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்க முடியாது.
மேலும் தற்போதைய நிலையில் இத்தனை ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்ததை முழுமையான தண்டனை அனுபவித்ததாக கருதி தற்போது ஜாமீனில் உள்ள பேரறிவாளனை விடுவித்து உத்தரவிடுகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. அதாவது, 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க கவர்னர் தாமதப்படுத்தினால், உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது சட்டப்பிரிவு 142 ஆகும். இந்நிலையில் பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகல் சுப்ரீம்கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!