பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி
2022-05-18@ 16:38:43

திருவனந்தபுரம்: கேரளாவில் பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறைகளாக மாற்றும் சோதனை முயற்சி நடைபெறவுள்ளது. கேரளாவில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பழைய தாழ்தள பேருந்துகளை வகுப்பறையாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பழைய பேருந்து ஒன்று வகுப்பறை போல் மாற்றி அமைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும் என கேரள அமைச்சர் அந்தோணி ராஜும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தகவலின்படி, குறைந்தது 400 அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் வெவ்வேறு டிப்போக்களில் செயலிழந்து கிடக்கின்றன. சமீபத்தில், அவற்றில் சில பேருந்து பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளாக மாற்றப்பட்டு, வெற்றிகரமான மகளிர் சுய உதவித் திட்டமான குடும்பஸ்ரீக்கு கஃபேக்கள் வாடகைக்கு விடப்பட்டன என்று தெரிவித்தார். கோடை விடுமுறையைத் தொடர்ந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது, அவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் என்றும் பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
நாங்கள் அதை சோதனை அடிப்படையில் செய்கிறோம். திருவனந்தபுரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு பேருந்துகள் வழங்கப்படும். மலப்புரம் மாவட்டமும் இரண்டு பேருந்துகளை நாடியுள்ளது. இது குழந்தைகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். இதற்கு மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!