நள்ளிரவில் மலர்ந்து அதிகாலையில் வாடும் நிஷாகந்தி: கூடலூரில் பூத்து குலுங்குகிறது
2022-05-18@ 15:25:14

கூடலூர்: கூடலூர் பகுதியில் நிஷாகந்தி மலர் செடிகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அந்த செடிகளிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பூக்கக்கூடிய நிஷாகந்தி பூக்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. தாமரையின் அளவை விட பெரிதான இந்த பூக்கள் இரவு 8 மணிக்கு மேல் மொட்டுக்கள் மலரத் துவங்கி நள்ளிரவில் முழுமையாக மலர்ந்து அதிகாலையில் வாடும் தன்மை உள்ளது. தற்போது இப்பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பூக்கள் இரவில் பூத்து அப்பகுதிகளில் நறுமணம் வீசி வருகின்றன. சீனர்களின் அதிர்ஷ்ட பூவாக இது உள்ளதாகவும் பெரும்பான சீனர்களின் வீடுகளிலும் இதனை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சங்க காலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்த முனிவர் ஒருவரின் தவத்தை கந்தர்வ அழகிகள் கலைக்க முற்பட்டதாகவும், கோபமடைந்த முனிவர் அந்த அழகிகளை பார்த்து நீங்கள் அனைவரும் நிஷாகந்தி பூவாக மாறி யாரும் பார்க்க முடியாத அளவில் இரவில் பூத்து காலையில் வாட வேண்டும் என சாபம் கொடுத்ததாகவும் கதைகள் கூறுகின்றன.கூடலூர் தோட்டமூலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத்துள்ள இந்த நள்ளிரவில் பூக்கும் அதிசய மலர்களை அக்கம் பக்கத்து மக்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
விளாத்திகுளத்தில் ஒரே நேரத்தில் 2 கன்றுகுட்டி ஈன்ற பசு
சிதம்பரம் கோயிலில் அவமதிப்பு விவகாரம்; நடராஜரும்...நானும்... இடையில் நாரதர்கள் வேண்டாம் கவர்னர் தமிழிசை பதிலடி
திசையன்விளை பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் இன்று காலை செப்பு தேரோட்டம்; பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
மாணவியை கடத்தி வாலிபருக்கு திருமணம்; 2 பெண்கள் கைது!
பக்ரீத் பண்டிகையை யொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுசந்தையில்; 2 கோடி ரூபாய்க்கு விற்பனை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..