திருவாரூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளுடன், தாய் தற்கொலை முயற்சி
2022-05-18@ 15:09:38

திருவாரூர்:திருவாரூர் அருகே பெண் ஒருவர், இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த கம்மங்கொல்லையில் வசிப்பவர் ஜெயசீலன்-நந்தினிதேவி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், நந்தினிதேவி விஷம் சாப்பிட்டுள்ளார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு தாயே உணவில் விஷம் கலந்து கொடுத்த கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்; மாஜி அமைச்சர் உதயகுமார் தாக்கு
சாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சி; ஓபிஎஸ் மீது செல்லூர் ராஜூ மறைமுக தாக்கு
அடுத்த மாதம் 10ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!
விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தில் மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் பலத்த காயம்..!
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!