அமெரிக்காவில் இந்திய வம்சாவழி மாணவர் மீது கடும் தாக்குதல்!: இணையத்தில் வெளியான காணொலியால் டெக்சாஸில் பரபரப்பு..!!
2022-05-18@ 10:22:19

டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸில் உள்ள (COPPELL MIDDLE SCHOOL) உணவு கூடத்தில் அமர்ந்திருந்த 14 வயது இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க மாணவர் எழுந்திரிக்க சொல்லி மிரட்டுவதும், பின்னர் மாணவர் கழுத்தை தனது கைகளால் நெரித்து இழுத்து தரையில் தள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் போது உடன் இருந்த மாணவர் ஒருவர் இதனை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவழி மாணவரை 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்திருப்பதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. இதையடுத்து பள்ளியின் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட பாதிக்கப்பட்ட இந்திய மாணவரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழி மாணவர் கொடுமைப்படுத்தப்படும் காணொலி டெக்சாஸில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகள்
எகிப்து சர்ச்சில் தீ விபத்து 41 பேர் பலி
தைரியம் என்றால் இப்படி இருக்கணும், ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான்; பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? இலங்கை அரசு மறுப்பு
அமெரிக்க எம்பி.க்கள் தைவானில் பயணம்; சீனா கடும் எதிர்ப்பு
பைடன் அதிர்ச்சி
ருஷ்டிக்கு வைக்கப்பட்ட வென்டிலேட்டர் நீக்கம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!