சீனாவில் 123 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்து :விமானத்தில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை செயல் இழக்க செய்தது அம்பலம்!!
2022-05-18@ 10:00:12

பெய்ஜிங் : சீனாவில் 123 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் புலனாய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் கடந்த மார்ச் 21-ந்தேதி அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது. விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 123 பயணிகள், 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து கறுப்புப் பெட்டிகள் மீட்கப்பட்ட போதும், அதில் இருந்து விவரங்களை பெற முடியாத அளவிற்கு அவை சேதம் அடைந்து இருந்தன. இதையடுத்து கறுப்புப் பெட்டி அமெரிக்காவில் உள்ள விமானத்துறை நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விமான விபத்திற்கு 100% மனித தவறே காரணம் என்று நியூயார்க்கில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது. விமானத்தை இயக்க விமானிகள் அறையான காக்பிட் பகுதியில் இருந்தவர்களில் ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை கட்டுப்பாடு இழக்க செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவாகி இருந்த தரவுகளில் இருந்து இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
கோட் சூட்’ அணிய முடியாமல் தவித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன்: கடைசியில் உதவிய மனைவி
கிராமி விருது பெற்ற ஹாலிவுட் பாடகர் மறைவு
மாலத்தீவு, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு கோத்தபய ஓட்டம்
இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணம் கடும் உயர்வு: ரணில் விக்ரமசிங்கே அரசைக் கலைக்க மக்கள் வலியுறுத்தல்
நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஜோ பைடன் ஒப்புதல்
இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!