சென்னையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி!!
2022-05-18@ 08:13:21

சென்னை : சென்னையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி நடப்பாண்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையில் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணிந்து பயணித்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இதே போல கடந்த ஆண்டு நடந்த விபத்துகளை ஆய்வு செய்த போது, சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,294 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,929 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 'விபத்துக்களை தடுக்க, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மீறினால், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் புதிய திருப்பம்: 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்..!
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!