காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2022-05-17@ 18:51:13

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், பின்னர் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வீடியோ பதிவுடன் மே 25-ம் தேதி அறநிலையத்துறை அதிகாரி அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்களும் பாடுகிறார்கள் என்றும், நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட பிரபந்தம், திராவிட வேதம் என நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னோற்றுதலின் பொழுது இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
சித்ரா பவுர்ணமியையொட்டி 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த பாலாற்றில் வரதராஜப்பெருமாள் இறங்கும் வைபவத்தில் நடைபெற்ற இரு பிரிவினருக்கிடையேயான மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வரதராஜபெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்தது. இதைதொடர்ந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். எனவே காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வேதபாராயணம் பாடுவதில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. மேலும் வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தென்கலை பிரிவினரை மட்டும் வேதபாராயணம் பாட அனுமதித்தது பாரபட்சமானது என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. மேலும் வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
செங்கல்பட்டு அருகே முகம் சிதைத்து வாலிபர் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!