நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி
2022-05-17@ 17:33:09

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பல கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி 2020 நவம்பர் மாதம், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் லாலா என்ற உள்ளூர் நிலக்கரி இயக்குநரான அனுப் மஜ்ஹி, முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்குபதியப்பட்டன.
இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குனரகம் தாக்கல் செய்த மனுவில், ‘நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அபிஷேக் பானர்ஜியுடைய மனைவி ருஜிரா பானர்ஜி ஒத்துழைக்கவில்லை’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு எதிராக ஜாமீன் பெறக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ெடல்லி அமலாக்கத்துறை முன் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும். அமலாக்கத்துறையின் சம்மன் மற்றும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா ஆகியோரிடம் அமலாக்கத்துறை டெல்லியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. இருப்பினும் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க விரும்பும்பட்சத்தில் 24 மணி நேரத்திற்கு முன்னதாக சம்மன் கொடுக்க வேண்டும். அவர்களை கொல்கத்தா அமலாக்க துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கலாம். மேற்குவங்க மாநில அரசு, அமலாக்க இயக்குனரக அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
ராமர் வேடத்தில் நடிக்க ரூ120 கோடி சம்பளம் கேட்கும் பிரபாஸ்
படப்பிடிப்பின்போது மாரடைப்பு: மலையாள நடிகர் காலித் மரணம்
பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெலுங்கு சினிமா தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்
சிரஞ்சீவி, வெங்கடேஷுக்கு பார்ட்டி கொடுத்த சல்மான்
அரிசி, பால் பவுடர் அனுப்பியது: இலங்கைக்கு இந்தியா ரூ65.3 கோடிக்கு உதவி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!