திண்டுக்கல் அருகே மான் தோல், நரி பல் வைத்திருந்த ஜோதிடர் கைது
2022-05-17@ 14:44:32

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மான் தோல் மற்றும் மான் கொம்பு, நரி பல் வைத்திருந்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து மான்தோல், நரி பல், ஆமை ஓடு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் மான்தோல், மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள ரெட்டியபட்டிக்கு சென்று வீடு வீடாக சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மான்தோல், மான் கொம்பு, நரிபல், ஆமை ஓடு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.
அவர், திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (46) என்பதும், ரெட்டியபட்டியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஜோதிடம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. வனத்துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்து, அவவது வீட்டில் இருந்த 3 புள்ளிமான் தோல், 3 மான் கொம்பு, 6 நரி பல், 17 ஆமை ஓடு, 2 காட்டுப்பன்றி மண்டை ஓடு, 11 காட்டுப்பன்றி பல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மான்தோல் மற்றும் மான்கொம்பு உள்ளிட்டவைகள் சுந்தரமூர்த்திக்கு எப்படி கிடைத்தது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னை வந்த விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர் கைது
கோயில் பூட்டு உடைத்து உண்டியல் கொள்ளை; அம்பத்தூர் அருகே இருவர் கைது
கூடுவாஞ்சேரி அருகே அரசு பெண் அதிகாரி வீட்டில் 32 சவரன் துணிகர கொள்ளை
செங்கல்பட்டு அருகே பேருந்து நிறுத்தத்தில் காந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!
மதுரையில் போலீசார் அதிரடி கஞ்சா விற்ற தம்பதியின் ரூ.5.50 கோடி சொத்து முடக்கம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;