தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை.... புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல்துறை!!
2022-05-17@ 12:22:42

லக்னோ: தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகலாய அரசர் ஷாஜஹான் தனது மனைவி நுார்ஜஹான் நினைவாக கட்டியது தாஜ்மகால். ஆக்ராவில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜ பிரச்னையை எழுப்பி வருகிறது. இக்கோயிலில் இருந்த சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இதை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரி, பாஜ செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த தகவலை கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போன்ற விவாதங்கள் வரவேற்பு அறைகளில்தான் நடக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் அல்ல. எனவே, அறைகளை திறந்து சோதனையிட உத்தரவிட முடியாது,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ' மழை..!
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் கைது
சோனியாவுக்கு கொரோனா காங். அலுவலகத்தில் கொடியேற்றுவது யார்?
கர்நாடக அரசு விளம்பரத்தில் நேருவின் பெயர் புறக்கணிப்பு: காங்கிரஸ் கொந்தளிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!