திருப்பதி ஏழுமலையான் கோயில்; வைகாசி மாத பவுர்ணமி கருட சேவை: மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்
2022-05-17@ 11:54:13

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று வைகாசி மாத பெளவுர்ணமியை முன்னிட்டு இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட வாகனம் மண்டபத்தை அடைந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். கொட்டும் மழையிலும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். யானைகளின் உலா பகதர்கள் கோலாட்டம் என களைகட்டியது. பக்தர்களும் விடாது பெய்த மழையிலும் மாடவீதிகளில் காத்திருந்து ஏழுமலையானின் கருட வாகன சேவையை தரிசித்தனர்.
கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திருப்பதியில் பெளவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் உலா வருகிறார் மலையப்பசுவாமி. ஒவ்வொரு மாதமும் பெளவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் சாமி கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி புஷ்பயாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கபிலேஸ்வரர் சாமி காமாட்சி ஆகியோருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சம்பங்கி, ரோஜா, மல்லி, கனகாம்பரம், உள்ளிட்ட 11 வகையான பூக்கள் மற்றும் 5 வகையான இலைகளை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டரை டன் மலர்களை கொண்டு நடந்தபட்ட புஷ்பயாகத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.
மேலும் செய்திகள்
75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ' மழை..!
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!