புதுக்கோட்டை மாவட்டம் துலையனுர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: இருவர் பணியிடை நீக்கம்: ரூ.35 லட்சம் அபராதம்
2022-05-17@ 11:01:25

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் துலையனுர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது. இளநிலை தர ஆய்வாளர் ரவி, தரக்கட்டுப்பாட்டு உதவியாளர் சரவணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருவருக்கு ரூ 35 லட்சம் அபராதம் விதித்து சிவில் சப்ளை கார்பொரேஷன் மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகளை வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவாசியிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 4,120 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது.
காவிரி டெல்டாவின் கடைமடி பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விளங்கி வருகிறது. குறிப்பாக 2 லட்சம் ஏக்கருக்கு மேலே வருடம் முழுவதும் நெல் பயிரிடபடுகிறது. திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைவிக்கபடுகிறது. இந்தாண்டு பருவமழை அதிகமாக வந்ததால் நெல் விளச்சல் அதிகமாக வந்தது. இதனிடையே விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்ய ஆங்காங்கே நேரடி அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய் இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது.
ஆய்வுக்காக சிவில் சப்ளை கார்பொரேஷன் அதிகாரிகள் சென்ற போது 4,120 நெல் மூட்டைகள் வீணானது தெரிய வந்தது. அது எப்படி வீணானது என்று அதிகாரிகள் கேட்டதும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது என்று கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அறிக்கையாக தயார் செய்து சிவில் சப்ளை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி-க்கு அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து இளநிலை தர ஆய்வாளர் ரவி, தரக்கட்டுப்பாட்டு உதவியாளர் சரவணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்தும் மேலும் ரூ.35 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வருவதாக ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!