SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேருக்கு நேர்

2022-05-17@ 00:15:49

உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வராத நிலையில், நேட்டோவில் இணைவதாக பின்லாந்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவில் இணைந்தால், ராணுவ ரீதியிலான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் எச்சரிக்கையை பின்லாந்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. திடீரென உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது போல், பின்லாந்து மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.  உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருகின்றன. அமெரிக்கா, நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

தற்போது வரை ரஷ்யாவுக்கு வெளிப்படையாக எந்த ஒரு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்த ரஷ்யாவுக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவிக்கலாம். அவ்வாறு நடந்தால், மிகப்பெரிய அளவிலான தாக்குதலை ரஷ்யா முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது. பின்லாந்து மீதும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு, அதற்கான வேலையில் இறங்கியுள்ளது. நேட்டோவுடன் மோத சரியான காரணங்கள் ரஷ்யாவுக்கு கிடைக்கவில்லை. ஆகையால் தான் நேட்டோவுடன் மோதாமல், நேட்டோவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதில், உக்ரைன் சிக்கி தவித்து வருகிறது. நேட்டோ அமைப்பு மூலம் எதிர்காலத்தில் தங்கள் நாட்டிற்கு ஆபத்து இருக்கலாம் என ரஷ்ய அதிபர் புடின் நினைக்கிறார். எனவே தான் நேட்டோவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில், உக்ரைன் மீது பயங்கர தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

தற்போது பின்லாந்தும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளது, ரஷ்யாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் இறுதியில் அல்லது பின்லாந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் போது, நேட்டோ அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் இறங்கும் என அதிபர் புடின் கணக்கு போட்டுள்ளார். அப்போது நேட்டோவும்- ரஷ்யாவும் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்படும். இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் துவங்கி விடும். ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி எந்த ஒரு நாடும் நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்பது தான் அதிபர் புடினின் ஆசை. முக்கியமாக, ரஷ்யா- நேட்டோ நேரிடையாக மோதினால் கண்டிப்பாக அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும்.

உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால், அமெரிக்காவும்- ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தற்போது அதற்கான வாய்ப்பில்லை. போர் நிறுத்தத்தை அமெரிக்காவும் விரும்பவில்லை. ஆகையால் தான் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. அமெரிக்கா- ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வந்து விடும். அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய நாடுகளும் மவுனமாக இருந்து வருகிறது என்பது தான் ஆச்சரியம். உக்ரைனை தொடர்ந்து, பின்லாந்து மீதும் ரஷ்யா போர் தொடுத்தால், அமெரிக்கா நேரிடையாக போர்க்களத்திற்கு வர வாய்ப்புள்ளது. முக்கியமாக, ரஷ்யா- அமெரிக்கா நேரிடையாக மோதும் சூழல் வெகுதொலைவில் இல்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்