புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
2022-05-16@ 17:04:02

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுபான கடை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணமேல்குடி பகுதியில் புதிய மதுபான கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்பிகாபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். புதிய மதுபான கடை திறக்க கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் புதுக்கோட்டை ஆட்சியர் 6 வாரத்துக்குள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க உத்தரவிட்டார். அதன்வரை புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் துயரமாக இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஏராளமானோர் அன்றையதினம் வாங்கும் சம்பளத்தை, அன்றையதினம் மாலையிலேயே டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கடித்துவிட்டு அழித்து வருகின்றனர்.
இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்து வருகின்றன. இப்படி குடித்து குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பலரும் இறந்து விடுவதால் ஏராளமான பெண்கள் தாலியை இழந்து பறிதவித்து வருகின்றனர். அக்குடும்பமும் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட புதுவிதமான அறை: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு..!!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பருத்தி விவசாயிகள் போராட்டம்: பருத்திக்கு உரிய விலை கேட்டு சாலை மறியல்..!
வெளிவரும் பண்டைய தமிழர்களின் பயன்பாடு!: கீழடியில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு..!!
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி
பண்ருட்டியில் கொரோனாவால் தாய் உயிரிழப்பு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஊர்மக்கள்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!