லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி
2022-05-16@ 05:29:07

மும்பை: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் வென்றது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் 41, கேப்டன் சாம்சன் 32, தேவ்தத் படிக்கல் 39, ரியான் பராக் 19 ரன் விளாசினர். ஆர்.அஷ்வின் 10, போல்ட் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து தோற்றது. தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன் விளாசினார். ஸ்டோய்னிஸ் 27 ரன், பாண்டியா 25 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது.
மேலும் செய்திகள்
ரூட் - பேர்ஸ்டோ அபார ஆட்டம் இமாலய இலக்கை விரட்டி இங்கிலாந்து அணி சாதனை: தொடரை சமன் செய்து அசத்தல்
சில்லி பாய்ன்ட்...
விம்பிள்டன் டென்னிஸ் 34 வயது மரியா முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி!
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!