பாகிஸ்தானில் கடை வைத்திருந்த 2 சீக்கியர்கள் சுட்டுக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்
2022-05-16@ 01:42:06

பெஷாவர்: பாகிஸ்தானில் பட்டப்பகலில் சீக்கிய தொழிலதிபர்கள் இருவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்க்வா ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தினராக உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், அது சார்ந்த அமைப்புகள், மத வழிபாட்டு தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த சல்ஜித் சிங் (42), ரஞ்சித் சிங் (38) ஆகியோர் பெஷாவர் அருகே சர்பாந்த் பகுதியில் உள்ள பாட்டா தால் பஜாரில் நறுமணப் பொருட்கள் கடை நடத்தி வந்தனர். நேற்று காலை பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ரஞ்சித் சிங்கும், சல்ஜித் சிங்கும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வலியுறுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகள்
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!