SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாறு காணாத பலத்த கடல் சீற்றம்: 2 துண்டாக உடைந்த படகு

2022-05-16@ 00:59:04

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று காலை முதல் வரலாறு காணாதபடி பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீனவர்களின் ஒரு படகு ராட்ச அலையில் சிக்கி 2 துண்டுகளாக உடைந்து கடலில் அடித்து செல்லப்பட்டது. மேலும், ராட்சத அலை கரைப்பகுதியை நோக்கி 30 மீட்டர் தூரத்துக்கு முன்னோக்கி வந்து தண்ணீர் சூழ்ந்தது. கடற்கரையோரம் உள்ள உணவு விடுதிகள், ஓட்டல்களுக்கு அருகே கடல் நீர் சூழ்ந்ததால், வழக்கமாக நடைபயிற்சி செய்பவர்கள் சிரமம் அடைந்தனர். கரைப்பகுதி வரை, கடல் சூழ்ந்து விட்டதால் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் தவித்தனர்.

மேலும், கடற்கரையொட்டி உள்ள கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள், மாலையில் கடற்கரைக்கு சென்று பொழுதை கழிக்க திட்டமிட்டனர். அப்போது ஏற்பட்ட பலத்த கடல் சீற்றத்தை கண்டு, பயத்துடன் ஓடியதை காண முடிந்தது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவரின் ஒரு படகு 2 துண்டாக உடைந்து, அலையில் அடித்து சென்றது. கடல் சீற்றத்தால் கடல் அரிப்பை தடுக்கவும், பேரிடர் காலங்களில் மீனவர்களை பாதுகாக்கவும் தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து, தூண்டில் வளைவு அமைத்து மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்