ராமேஸ்வரத்தில் கடல் 50 அடி உள்வாங்கியது: நீராட வந்திருந்த பக்தர்கள் பதற்றம்
2022-05-16@ 00:50:01

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நேற்று காலை 6 மணியளவில் சுமார் 50 அடி தூரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடல் அடியில் உள்ள பவளப்பாறைகள், சிப்பிகள் உள்ளிட்டவை வெளியில் தென்பட்டன. கடல் உள்வாங்கியதால், புனித நீராட வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் காலை 7.30 மணியளவில் மீண்டும் கடல் நீர்மட்டம் சீரானது. இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர். இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறுகையில், ‘‘அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்குவது வழக்கமாக நடைபெறுவதுதான். ஆனால் 50 அடி தொலைவு வரை கடல் உள்வாங்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் 2 மணி நேரத்திற்குள், மீண்டும் கடல் நீர்மட்டம் சீராகி விட்டது’’ என்றனர்.
Tags:
Rameswaram 50 feet from the sea swim devotees tense ராமேஸ்வரம் கடல் 50 அடி நீராட பக்தர்கள் பதற்றம்மேலும் செய்திகள்
2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!