ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் 11,833 மனுக்களுக்கு தீர்வு
2022-05-16@ 00:34:25

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் நடைபெற்ற ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் பெறப்பட்ட 13,231 மனுக்களில் 11,833 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 315 இடங்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இதில், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், கைப்பேசி எண் மாற்றம், அங்கீகார படிவம் மூலம் பண்டங்கள் பெறுதல், நியாயவிலை கடை மீதான புகார், அட்டை வகை மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், பெயர், பிறந்த தேதியில் திருத்தம், வெளிச்சந்தையில் சேவை குறைபாடுகள் என மொத்தம் 13,231 மனுக்கள் பெறப்பட்டன.
அதிகபட்சமாக முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு மட்டும் 5,476 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 5,309 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, கைபேசி எண் மாற்றம் குறித்து 3,070 மனுக்கள் பெறப்பட்டு 3,047 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. புதிய குடும்ப அட்டை பெறுதல் குறித்து 501 மனுக்கள் பெறப்பட்டு 120 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தம் பெறப்பட்ட மனுக்களில் 11,833 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இதேபோல், 1,379 மனுக்கள் பல்வேறு ஆய்வுகளுக்காகவும், விசாரணைக்காகவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
Tags:
Ration card grievance camp 11 833 petition settlement ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் 11 833 மனு தீர்வுமேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை
லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!