SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடாமுயற்சி

2022-05-15@ 00:16:41

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை, கோவையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற மாநாட்டையும், சென்னையில் “ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சிகள் நடத்தி சர்வதேச முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பணியில் செவ்வனே செயல்பட்டுள்ளது திமுக அரசு. ஐக்கிய அரபு நாட்டில் நடந்த எக்ஸ்போவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.  

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது 41.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.தொழில் முதலீடுகளை ஈர்க்க அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டு முதலமைச்சரும், தொழில் துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். இதன்படி, சுவிட்சர்லாந்து நாட்டின் டவோஸ் நகரில் அடுத்த வாரம் நடைபெற உள்ள உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் தமிழகம் பங்கேற்கிறது.  அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கு அரங்குகள் அமைக்க உள்ளன. தொற்காசியாவில் இருந்து தமிழகம் மட்டுமே அரங்கம் அமைக்கிறது. இந்த வருடாந்திர கூட்டத்தில், உலகெங்கும் உள்ள 50 நாட்டு தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 2,000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தின் சார்பில்  உயர் மட்டக் குழு அங்கு செல்கிறது.  

இந்த கூட்டத்தின் போது பல்வேறு நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் அவர்களை முதலீடு செய்ய வைக்க தமிழக குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழக குழுவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்படி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து தமிழக மக்கள் பிரமித்து போய் இருக்கிறார்கள். தொழில்களை ஈர்ப்பதில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி மிகவும் பின்தங்கிவிட்டது. கமிஷன், கலெக் ஷன், கரப்ஷனை அடிப்படையாக கொண்ட ஆட்சியில் தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? இதனால், அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு புதிய முதலீடுகள் சென்றன. தமிழகம் தொழில் துறையில் பின்தங்கியது. இப்போது, நிலை மாறி, தொழிலதிபர்கள் தொழில் துவங்குவதற்கு, நம்பர் 1 விருப்ப மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே இந்த மாற்றம். புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி செய்து வரும் விடா முயற்சிக்கு, விஸ்வரூப வெற்றி கிடைப்பது உறுதி.

Like Us on Facebook Dinkaran Daily News
 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

 • same-sex-27

  மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்