சென்னை ராயபுரத்தில் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவால் பைனான்சியர் வெட்டிக்கொலை
2022-05-14@ 11:59:45

சென்னை: சென்னை ராயபுரத்தில் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவால் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தவரின் தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாக கொல்லப்பட்டவர் மணலியை சேர்ந்த சக்கரபாணி, இவர் வட்டிக்கு பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி முதல் தந்தையை காணவில்லை என்று அவரது மகன் நாகேந்திரன் மணலி காவல்நிலயத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது செல்போன் சிக்னல் ராயபுரம் கிரேஸ்கார்டன் 3-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காட்டியது. அவரது இருசக்கர வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னல் காட்டிய தமிம்பானு என்பவற்றின் வீட்டிற்குள் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சாக்கு மூட்டையில் கைகால்கள் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தமிம்பானுவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரது வீட்டிற்கு சக்கரபாணி வந்துள்ளார்.
அப்போது தமிம்பானுவின் சகோதரர் வாசிம்பாஷாவுக்கும் சக்கரபாணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் வாசிம்பாஷா வெட்டியதில் சக்கரபாணி உயிரிழந்தார். இதனையடுத்து 2 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு கழிவறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.
தலையை துண்டித்து அடையாற்றில் வீசிவிட்டு, உடலை காசிமேட்டில் வீசியுள்ளனர். மேலும் கைகால்களை மட்டும் வீட்டில் வைத்துள்ளனர். இதையடுத்து வாசிம்பாஷா, தமிம்பானு ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!