இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா?: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை தாக்க தூண்டிவிட்டதாக கொழும்பு நீதிமன்றத்தில் மனு..!!
2022-05-14@ 11:32:54

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக் உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஓட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன. மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரைவிட்டு வெளியேறினர். மருத்துவ ரீதியாக வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்று தகவல்கள் வெளியானது. இதனிடையே, வன்முறையை தூண்டியதாக தொடர்ந்த வழக்கில் ராஜபக்சே, பாராளுமன்ற உறுப்பினர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக் உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்சே மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே மட்டுமின்றி எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ உள்பட 7 பேரை கைது செய்ய உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேனகா பெரேரா மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்டிருக்கிறது. கொழும்பு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 21ம் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா? அமைச்சரவையில் இன்று பரிசீலனை
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இந்தியாவுக்கு இம்ரான் மீண்டும் பாராட்டு மழை
12 நாடுகளில் 92 பேருக்கு பாதிப்பு குரங்கு அம்மை மேலும் பரவும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கூடுதல் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடி; கனடா பிரதமரின் மனைவி ரஷ்யாவிற்குள் நுழைய தடை
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!
திவாலுக்கு வரிசை கட்டி நிற்கும் நாடுகள்: இலங்கை... ஓர் ஆரம்பம்! முழுமையாக ஸ்தம்பிக்கும் உலக பொருளாதாரம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்