பிரதமரின் வீடு திட்டம்: லஞ்சம் கொடுத்தும் நிதி வழங்காததால் வாலிபர் தற்கொலை: ஊராட்சி ஒன்றிய அலுவலர் சஸ்பெண்ட்
2022-05-13@ 00:02:25

நன்னிலம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுதக்குடியை சேர்ந்த லெனின் மகன் மணிகண்டன்(25). கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், ஒன்றிய அரசின், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அனுமதி பெற்றுள்ளார். முதல்கட்ட பணி முடிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மணிகண்டன் முதல் தவணை பணம் கேட்டுள்ளார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலரான கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரன் (45) கேட்டபடி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். இதைதொடர்ந்து 2வது தவணை பணம் கேட்டதற்கு மகேஸ்வரன் ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதற்காக வெளிநாடு செல்வதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். 10 நாட்கள் கடந்தும் 2வது தவணை பணம் வராததால் மகேஸ்வரனை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன், நேற்றுமுன்தினம் பூச்சி மருந்து குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை பார்த்த சிலர், வீட்டில் மயங்கி கிடந்த மணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
Tags:
Prime Minister's Housing Scheme Bribery Youth Suicide Panchayat Union Officer Suspended பிரதமரின் வீடு திட்டம் லஞ்சம் வாலிபர் தற்கொலை ஊராட்சி ஒன்றிய அலுவலர் சஸ்பெண்ட்மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஆந்திர வனப்பகுதிகளில் கோடை மழையால் மோர்தானா அணை நிரம்பி பெரிய ஏரிக்கு செல்லும் உபரிநீர்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களோடு வந்து கதறி அழுத பெண்கள்
வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது
கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் தாழிகள்: ஆய்வாளர்கள் ஆச்சரியம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!