SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலர்களின் ‘காவலர்’

2022-05-12@ 00:01:10

முக்கிய விஐபிக்கள் சாலை மார்க்கமாக வரும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வர். அதை மனதில் கொண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சமூகத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தவிர்க்கும் பணியில் காவலர்கள் பங்கு மிக முக்கியமானது. கடினமான காவல்பணியில் ஈடுபட்டுள்ள பெண்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலான முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், காவலர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்ததால் கடும் மன உளைச்சலில் தவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது காவலர்கள் அதிகளவு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தன. இதை மனதில் கொண்டு முதல்வரின் பரிந்துரையின்பேரில், காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை திட்டம் அமலுக்கு வந்தது. நேற்று முன்தினம் பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஜாதி, மத மோதல்களில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என புள்ளிவிவரங்களோடு பேசினார். சமீபத்தில், தேனிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்புகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, விரைவில் நிறைவேற்றப்படுமென கூறியிருந்தார்.

பேரவையில் காவலர்கள் மகிழும்படி, இரவு ரோந்து செல்பவர்களுக்கு சிறப்பு படியாக ரூ.300, வார விடுமுறையோடு எஸ்ஐ மற்றும் சிறப்பு எஸ்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பும் அறிவித்திருந்தார். தமிழக காவல்துறையில் உயரதிகாரிகள் முதல் காவலர் நிலை வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.

மேலும், காவலர்களுக்கான புதிய வாகனங்கள், நவீன தொழில்நுட்ப சாதனங்கள், செயலிகள், தடயவியல் சோதனைகளுக்கான ஆய்வகங்கள், போக்சோ சட்ட வழக்குகளில் தடயங்கள் ஆய்வுக்காக சென்னை தலைமை செயலகத்தில் ரூ.3.71 கோடியில் பிரத்யேக அலகு உருவாக்கப்படுமென அறிவித்தார். காவலர்களுக்கு மட்டுமின்றி, தீயணைப்பு ஊழியர்களுக்கு இடர்படி ரூ.800லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தியும், தீயணைப்பு பணிகளுக்காக நவீன தொழில்நுட்ப சாதனங்களை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஒரு மாநில மக்களை பாதுகாப்பாக உணரச் செய்வதே ஒரு அரசின் முக்கிய பங்காகும். அதை மனதில் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டும், செயல்படுத்தியும் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களின் காவலராக திகழ்கிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

 • same-sex-27

  மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்