SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மும்பை அபார வெற்றி

2022-05-07@ 01:33:49

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், இஷான் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. ரோகித் 43 ரன் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். சூரியகுமார் 13 ரன்னில் வெளியேற, இஷான் 45 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜோசப் பந்துவீச்சில் ரஷித் வசம் பிடிபட்டார். போலார்டு 14 பந்தில் 4 ரன் மட்டுமே எடுத்து கிளீன் போல்டானார். திலக் 21 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் சிக்சர்களாகப் பறக்கவிட, மும்பை ஸ்கோர் எகிறியது.

சாம்ஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மும்பை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. டேவிட் 44 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), எம்.அஷ்வின் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ரஷித் 2, ஜோசப், பெர்குசன், சங்வான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. விருத்திமான் சாகா அதிகபட்சமாக 55 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். சுப்மான் கில் 52 ரன், ஹர்திக் பாண்டியா 24 ரன் எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் முருகன் அஸ்வின் 2 விக்கெட், ெபால்லார்டு 1 விக்கெட் எடுத்தனர். நடப்பு சீசனில் மும்பை தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்