SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்பிஏ நுழைவுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்: அண்ணா பல்கலை அறிவிப்பு

2022-05-02@ 00:20:35

சென்னை: அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இன்று முதல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம் பிளான், பட்டப் படிப்புகளில் இந்த  ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை 45 வெளியிட்டது.

அதன் பேரில் தற்போது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், எம்பிஏ படிப்பில் சேர 21,557, எம்சிஏ 8,391, எம்இ/எம்டெக்/எம்ஆர்க்/ எம்பிளான் படிப்புக்கு 6,762 என மொத்தம் 36,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் http://tancet.annauni.edu/tancet என்ற இணைய  தளத்தில் இருந்து இன்று முதல் 13ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொட்ரபாக மேலும் விவரம் வேண்டுவோர்,tancettau@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்