ஈரானில் இருந்து வந்த கன்டெய்னரில் திரவ வடிவில் 90 கிலோ ஹெராயின் கடத்தல்: குஜராத்தில் அடுத்தடுத்து சிக்குவதால் பரபரப்பு
2022-04-30@ 14:16:55

அகமதாபாத்: ஈரானில் இருந்து குஜராத் வந்த கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதற்குள் திரவ வடிவில் 90 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பிபாவாவ் துறைமுகத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக குஜராத் சிறப்பு புலனாய்வு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது சந்தேகத்துக்கு உரிய கன்டெய்னரில் சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.450 கோடி என்று அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து குஜராத் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், ‘ஈரானில் இருந்து வந்த ஷிப்பின்ட் கன்டெய்னரில் இருந்து சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. கடத்தி வரப்பட்ட ஹெராயினை, திரவ வடிவில் கெட்டியான கயிறுகளில் மறைத்து வைத்திருந்தனர். கிட்டத்தட்ட 395 கிலோ கயிற்றில், சுமார் 90 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
கயிறுகள் என்பதால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்ற அடிப்படையில் கடத்தி வந்துள்ளனர்’ என்றார். பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் வழியாக போதைப்பொருளை கடத்தி வந்த கடத்தல்காரர்கள, தற்போது குஜராத் வழியாக போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். சமீபத்தில் குஜராத் கடற்கரைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!