தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: பேரவையில் முதல்வர் இரங்கல்
2022-04-28@ 04:42:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராதவிதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்து விட்டனர் என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியினை இப்பேரவைக்கு மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்கள் பிரதிநிதிகளும், அரசு உயர் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், பேரவையில் இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மிகுந்த துயரமான இச்சம்பத்தில் உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!