அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவு ரத்து .: மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
2022-04-27@ 17:07:00

சென்னை: சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் 'ஸ்ரீ ராம் சமாஜ்' என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014- ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அறநிலையத்துறை கையகப்படுத்தியதை உறுதிப்படுத்திய ஐகோர்ட் தனிநீதிபதியின் உத்தரவையும் ஐகோர்ட் ரத்து செய்தது. கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்துள்ளது.
மேலும் முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை புதிதாக விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்கலாம். அனைத்து தரப்பு விளக்கத்தை கேட்டபின் சட்டத்திற்கு உட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் ஸ்ரீராம் சமாஜுக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணையை தொடங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீராம் சமாஜை கோயில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது. மேலும் சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சணை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை எனவும் ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு
மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5, 800 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியது
போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?
சொத்துவரி செலுத்த தவறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
2ம் நாளாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பெற மக்களை அலைக்கழிக்க கூடாது: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!