இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன்: விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் பேட்டி
2022-04-22@ 18:54:20

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனிடன் நடைபெற்று வந்த விசாரணை நிறைவு பெற்றது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம், 2017ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார்.
அப்போது டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத போதிலும், சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் இரண்டாவது முறையாக கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன்; இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன். சுகேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறையின் விசாரணை நிறைவு பெற்றதாக கருதுகிறேன். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!