சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை 1 மற்றும் 2-வது போக்சோ வழக்குகளில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
2022-04-13@ 14:37:45

சென்னை: சிவசங்கர் பாபாவை வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
சிவசங்கர் பாபா மீது பல புகார்கள் வந்ததால், இதுவரை மொத்தம் 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளது.
அதனால் சிவசங்கர் பாபா தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால் தற்போது வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, முதல் மற்றும் 2-வது போக்சோ வழக்குகளில் இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!