பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை விவகாரம் ஓபிஎஸ் தம்பி, போலீஸ் அதிகாரிகள் குற்றத்தை ஐகோர்ட்டில் நிரூபிப்போம்: கோபியில் வக்கீல் பேட்டி
2022-04-12@ 00:01:06

கோபி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த வக்கீல் ப.பா.மோகனுக்கு கோபியில் தமிழர் உரிமை கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவர் அளித்த பேட்டி:
தற்போது சமூக நீதிக்கான ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. சாட்சிகளுக்கும், வக்கீல்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தமிழக அரசின் கடமை. பாடத்திட்டத்திலேயே சாதி மறுப்பு திருமணங்கள், சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளத்தில் காசி விஸ்வநாதர் கோயில் பூசாரி நாகமுத்துவை சாதியை சொல்லி திட்டியதோடு, போலீசாரை வைத்து பல்வேறு வழக்குகள் போட வைத்ததால், அவர் கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கையும் எடுத்து நடத்தி வருகிறோம். பூசாரி நாகமுத்து தற்கொலைக்கு ஓ.ராஜா மட்டும் காரணமில்லை. அவருக்கு துணையாக இருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பலரையும் சாட்சியாக சேர்த்து உள்ளனர். அந்த சாட்சிகள்தான் குற்றத்திற்கு துணை புரிந்து உள்ளனர். அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க உச்சநீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளது. அது முடிவடைந்ததும் அந்த வழக்கு நடத்தப்படும். உண்மை நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் தற்போது முழுமூச்சாக இறங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
In Periyakulam temple priest suicide OBS brother police officers பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை ஓபிஎஸ் தம்பி போலீஸ் அதிகாரிகள்மேலும் செய்திகள்
அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியான சம்பவத்தில் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்
பேரிகார்டுகளை அகற்றகோரி பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டம்
பாஜ அரசை கண்டித்து விவசாயிகள் இருசக்கர வாகன பிரசாரம்
காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காசில் பிக் ஜூவல்லரி ‘சேல் ஆபர்’ விழா
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!