காரை ஏற்றி விவசாயிகள் படுகொலை ஆசிஷ் ஜாமீன் ரத்தை விசாரிக்க புது அமர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
2022-03-16@ 00:32:44

புதுடெல்லி: ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உபி, அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தனது காரை ஏற்றியதில் 4 பேர் பலியாகினர். இந்த வழக்கில் ஆசிஷ் உட்பட 13 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, கடந்த மாதம் 10ம் தேதி ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர், ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இத்துடன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஷிவ் குமார் திரிபாதி, சிஎஸ் பாண்டா தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த வழக்குகள் கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதனை செவ்வாய் கிழமை (நேற்று) விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி என்வி. ரமணா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘வழக்கின் முக்கிய சாட்சியத்தை ஜாமீனில் வெளியே வந்தவர்கள் தாக்கி உள்ளனர். மேலும், உபி. தேர்தலில் பாஜ மீண்டும் வெற்றி பெற்றதால், அவர்கள் தங்கள் வழக்கை பார்த்து கொள்வார்கள் என்று மிரட்டியுள்ளனர்,’ என தெரிவித்தார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, `இந்த வழக்கை விசாரிப்பதற்கு புதிய அமர்வு அமைக்கப்படும். இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதில் இடம் பெறுவார்கள்,’ என உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
Tags:
Car loading farmers massacre Ashish bail canceled new session to investigate காரை ஏற்றி விவசாயிகள் படுகொலை ஆசிஷ் ஜாமீன் ரத்தை விசாரிக்க புது அமர்வுமேலும் செய்திகள்
சமீபத்தில் மோடியால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயிலில் குப்பை: பயணிகள் மீது ஐஏஎஸ் அதிகாரி கோபம்
கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம்: நீதிபதி அதிரடி உத்தரவு
கொலீஜியம் குறித்த விவகாரம்; நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்!: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
பணமோசடி வழக்கில் சிக்கிய சுகேஷை சிறையில் சந்தித்தேன்!: நடிகை சாஹத் கன்னா பகீர் பேட்டி
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை!: வெளியுறவு அமைச்சர் பேச்சு
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!