SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை மீனவர்கள் அமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம்: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

2022-03-05@ 16:39:08

கொழும்பு: இலங்கை மீனவர்கள் அமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்; நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறுகோரியும் இழுவைப்படகுகளுக்கு நடவடிக்கை எடுக்ககோரியும் மூன்று மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊடகங்கள் வாயிலாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இவ்விடயத்தை தெரிவித்தனர்.

அந்தக் கடிதத்தில்,வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலில் தங்கியிருக்கும் ஏறத்தாழ இரண்டு லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். முப்பது வருடகால யுத்தத்தினால் சொல்லமுடியாத துயரங்களையும் அழிவுகளையும் நாங்கள் சந்தித்திருந்தோம். யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவிற்கும் என தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம். யுத்த காலத்தில் எமது சமூகத்திற்கு அடைக்கலம் தந்தமைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதற்கண் எமது தெரிவிக்கின்றோம்.

நன்றியினை யுத்தத்திற்குப் பின்பு எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டிபெழுப்ப கடுமையாக முயற்சித்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையுமே நாம் சந்திக்க நேர்ந்தது. வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளந்தலைமுறை கடற்றொழிலையே கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தழிழ்நாட்டு இழுவைப்படகுகள். இந்த இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்துச்செல்வதனால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன.

மேலும் சொத்து இழப்புக்களைத் தவிர்க்க நாம் இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு போகாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம். கடல் வளங்களைச் சுரண்டும் இழுவைமடிகளால் சிறு மீனவர்களின் உற்பத்தியில் பாரியவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அழுலைமடி முறையால் வட இலங்கை மற்றும் தமிழ்நாட்டு சிறு கடற்றொழிளர்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது. இந்தப்பிரச்சினை இலங்கை கடற்றொழிலாளருக்கும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளருக்கும் இடையில் இருக்கும் வரலாற்று ரீதியான உறவையே பாதிகின்றது.

இழுவைப் படகுகளை முற்றாக நிறுத்துமாறு” இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு மத்தியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பல பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றபோதிலும், அவற்றின் மூலமாக ஒரு தீர்வையும் எட்டமுடியவில்லை. உண்மையில் இந்தப்பிரச்சினைக்கான தீர்வு என்பது” இரு நாட்டுக் கடலிலும் இழுவைப்படகு முறையினைத் செய்வதாகும். எனினும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் விருப்பு என்பது இரு நாடுகளின் மத்திய மற்றும் மாநில அரசியல் தலைமைத்துவங்களிடம் இருக்கவில்லை.

முதலமைச்சராக பதிவியேற்ற பின்பு தென்னிந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதி மக்களுக்காக நீங்கள் முன்வைத்த தீர்வுகளை அறிந்த நாம் உங்களுக்கு எமது நன்றிகளை கூறக் கடமைப்பட்டுள்ளோம். உங்களுடைய இவ்வாறான முற்போக்கான பார்வையில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்படும். வட இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

அதேவேளை இக்கடித்தில் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளபோதும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கையொப்பம் இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

 • same-sex-27

  மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்