ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
2022-02-28@ 07:24:35

பீஜிங்: ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. சீனா சமீபகாலமாக விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2015 ம் ஆண்டு முதல் ‘லாங் மார்ச் ராக்கெட்’ என்ற செயற்கைகோள் ஏவுதல் வாகனங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, லாங் மார்ச்- 8 என்ற நவீன வகை ராக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.
தெற்கு சீனா, ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 11.06 மணிக்கு 22 செயற்கைகோள்களுடன் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வணிக சேவைகள், கடல் சுற்றுசூழல் கண்காணிப்பு, காட்டுத்தீ தடுப்பு ஆகிய பணிகளை இந்த செயற்கைகோள் கண்காணித்து தகவல்கள் அனுப்பும். மேலும், விண்ணில் இருந்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை தற்போது சீனா படைத்துள்ளது.
மேலும் செய்திகள்
விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கிய 3 வீரர்களை பூமிக்கு கொண்டு வர மாற்று விண்கலத்தை ஏவியது நாசா!!
ஜோதிடமும் அறிவியலும்
மூளை முடக்கு வாதத்தை குணப்படுத்த முடியும்
நிலா இல்லைனா பறந்திடுவோமா...? வியாழன் இல்லைனா பூமி வெடிச்சுடுமா...?
2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவிப்பு
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி