காரியாபட்டி அருகே 60 ஆண்டுகளுக்கு பின் மறுகால் பாய்ந்த கண்மாய்: மலர் தூவி நன்றி தெரிவித்த மக்கள்
2022-02-17@ 12:16:03

காரியாபட்டி: காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பல ஆண்டுகளாக கண்மாய்க்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்த மக்கள், திமுக ஆட்சி அமைந்ததும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் இப்பகுதி விவசாய பொதுமக்கள் நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அமைச்சர் தங்கம்தென்னரசுவின் உத்தரவின்படி நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் தூர்வாரப்பட்டு கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
இதில் மாங்குளம், குரண்டி, ஆவியூர், அரசகுளம், கம்பிக்குடி, பாப்பணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உத்தரவுப்படி காரியாபட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்,திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவியூர் சிதம்பரபாரதி, அரசகுளம் சேகர் ஆகியோரின் தீவிர முயற்சியால் கால்வாய் திட்டம் கனரக இயந்திரம் கொண்டு சீரமைப்பு செய்யப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவியூர் கீழ்மேல் பெரிய கண்மாய்க்கு 60 ஆண்டுகளுக்கு பின்பு இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பெற்று கண்மாய் நிரம்பி மறுகால் வழி தண்ணீர் செல்கிறது.
மறுகால் அடித்துச் செல்லும் தண்ணீர் கம்பிக்குடி பெரிய கண்மாய்க்கு செல்கிறது. கண்மாய் நிரம்பி மறுகால் வரும் தண்ணீரை ஆவியூர் ஒன்றிய கவுன்சிலர் சிதம்பரபாரதி மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுக்கும் இப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!