SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் முத்துரங்கம் பூங்கா சீரமைக்கப்படும்: திமுக வேட்பாளர் காமராஜ் உறுதி

2022-02-17@ 00:11:39

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ் வார்டு முழுவதும் உள்ள பொதுமக்களை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.அந்த வகையில் 49வது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களை அவர் நேற்று நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குசேகரித்தார். தாம்பரம் முத்துரங்கம் பூங்கா கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்காவில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு வேட்பாளர் காமராஜ், `முத்துரங்கம் பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.எனவே அதனை சீர்செய்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக பூங்காவை சீர் செய்வதுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வேன்’ என உறுதியளித்தார்.இதில் பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், க.ஹரிஷ்குமார், பா.ஹரிஷ் (எ) அன்பழகன், எஸ்.ரமேஷ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்