ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
2022-02-12@ 00:08:58

மெல்போர்ன்: விண்கல் குறித்த புதிய தகவல்களை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 30 கோடி கி.மீ. தொலைவில் உள்ள, ‘ரியுகு’ என்ற விண்கல்லை ஆய்வு செய்ய ஜப்பான் கடந்த 2014ம் ஆண்டு, ‘ஹயபுசா 2’ என்ற விண்கலத்தை அனுப்பியது. நீண்ட பயணத்துக்கு பிறகு அந்த விண்கல்லில் தரையிறங்கிய ஹயபுசா, அங்குள்ள மாதிரிகளை சேகரித்து, கடந்த 2020 நவம்பரில் பூமிக்கு புறப்பட்டது. விண்கலத்தில் இருந்து விடுவிக்கப்படும் மாதிரிகள் அடங்கிய ‘கேப்சூல்’ ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஊமேரா நகரில் டிசம்பரில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஹயபுசா-2 சுமந்து வந்த விண்கல் மாதிரிகளை ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், பல புதிய தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
சூரிய குடும்பம் விண்கற்களால் நிறைந்துள்ளது. இவை பல்வேறு அளவுகளில் பாறைகளாக உள்ளன. அவை பிரதிபலிக்கும் ஒளியின் நிறமாலையை ஆய்வு செய்வதன் மூலம், மூன்று பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை, சி-வகை (அதிக கார்பன் உள்ளவை), எம்-வகை (உலோகங்கள் உள்ளவை) மற்றும் எஸ்-வகை (அதிக சிலிக்கான் கொண்டது). சூரியனை சுற்றி வரும் பெரும்பாலான விண்கற்கள் அடர்நிறம் கொண்ட சி-வகைகள். இதில்், ஆவியாகும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போதே உடைந்து போகின்றன. விண்கற்களில் 75% சி வகைகளாக இருந்தாலும் அவற்றின் மிச்சங்கள் பெரிய அளவில் நமக்கு கிடைப்பதில்லை. இவைபூமியில் உயிர்களை உருவாக்குவதற்கு ஆதாரமாக இருந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
உலகம் உருவான ரகசியத்தை தேடி பயணம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் தங்க முலாம் கண்ணாடி விரிப்பு: கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாசா சாதனை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!