அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022-02-10@ 15:01:14

இங்கிலாந்து: அணுக்கரு பிணைப்பு தொழிநுட்பத்தின் மூலம் அதிக ஆற்றலை உருவாகும் முயற்சியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் சுற்றுச் சூழலை பாதிக்காத எரிசக்தியை கண்டறிவதில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அணுக்களை அதிக வெப்ப நிலையில் இணைப்பது மூலம் அணுக்கருக்கள் இணைந்து ஆற்றல் வெளிப்படுவது வழக்கம் தற்போது வரை அணுக்கரு இணைப்பு மூலம் 22 மெகா ஜூல் ஆற்றலை வெளிக்கொணரப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகளின் பலனாக 59 மெகா ஜூல் ஆற்றல் வெளிகொணரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் அருகே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.
அறிவியலின் முன் நின்ற மிகப் பெரிய சவாலுக்கு தற்போது தீர்வை நெருங்கியுள்ளதாக இங்கிலாந்து அணுசக்தி ஆணையத்தின் தலைவர் இயன் சாப்மேன் தெரிவித்துள்ளார். உலகெங்கும் தற்போது பெட்ரோலியமே பிரதான எரிபொருளாக திகழும் நிலையில், அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில் சுற்றுசூழலை பாதிக்காத நடைமுறையில் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய எரிபொருளை கண்டறியும் முயற்சி உலகெங்கும் நடந்து வரும் நிலையில் அணுக்கரு இணைவு மூலம் அதிக ஆற்றலை வெளிக்கொணர்ந்து உள்ளது மிக முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பான அணுமின் உற்பத்தி முறையாகவும் கருதப்படுகிறது.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
உலகம் உருவான ரகசியத்தை தேடி பயணம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் தங்க முலாம் கண்ணாடி விரிப்பு: கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாசா சாதனை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!