SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ விரைவில் அறிமுகம்

2022-01-31@ 13:09:51

துபாய் : துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின்  கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு தி ஜெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நீர் வழியில் அதிவேகமாக செல்லக் கூடிய அளவில் இந்த படகு தயாரிக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதை அடுத்து தற்போது தி ஜெட் ஹைட்ரஜன் எரிவாயு படகின் பயன்பாட்டிற்கு துபாய் அனுமதி அளித்துள்ளது.  

சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் இதில் இருந்து புகை போன்ற உமிழ்வுகள் வெளியேறுவதில்லை. இந்த படகு இயங்கும் போது சத்தம் வரவில்லை என்பதுடன் நீர் பரப்பிற்கு 80 செமீ மேலே மணிக்கு 75 கிமீ வேகத்தில் பறந்து செல்லும். ஹைட்ரஜன் எரிசக்தியால் இந்த படகு இயங்குவதால் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. விரைவில் துபாய் கடல் பகுதியில் இந்த ஜெட் படகு பயணிகளை மகிழ்விக்க உள்ளது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்