SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வர் பிரச்னை காரணமாக ரேஷன் கடைகளில் அலைமோதிய கூட்டம்: பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி

2022-01-29@ 13:36:58

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டத்தில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு சர்வரில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பட்டியலிட்டு அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் அங்காடிகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு வழங்குவதில் ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் முடிவடைந்துவிட்டது.

பொங்கலுக்கு பிறகு உள்ள 15 நாட்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்டார கிடங்குகளிலிருந்து பொருட்கள் அங்காடிகளுக்கு அனுப்புவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அங்காடிகளில் பொருட்கள்பெற இந்த மாதத்திற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வரும 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்காடிகள் விடுமுறை இல்லாமல் செயல்பட்டால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வசதியாக இருக்கும். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த மாதத்தில் முதல் 15 நாட்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வாங்குவதிலேயே நேரம் போய்விட்டது.

அதனை தொடர்ந்து சர்வர் பிரச்சனை ஏற்பட்டு பொருட்கள் வாங்குவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்காடிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் காலையில் அங்காடிக்கு பொருட்கள் வாங்க சென்றால் மதியம் ஆகிவிடுகிறது. எனவே வரக்கூடிய 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை இல்லாமல் செயல்படக்கூடிய நாளாக அரசு அறிவித்து பொதுமக்கள் பொருட்கள் வாங்குதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்