SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னமனூர் அருகே சாலையோரம் குவிக்கப்படும் குப்பை: ஊராட்சி நிர்வாகம் அகற்ற கோரிக்கை

2022-01-29@ 13:35:40

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, சீலையம்பட்டி கிராமத்தில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், மெயின்ரோட்டில் பூக்கடை இருக்கும் வளாகப்பகுதியில் குப்பைகளை குவித்து வருகின்றனர். இதன் அருகே, மேலப்பூலானந்தபுரம் செல்லும் சாலையும் உள்ளது.

இந்நிலையில், சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சீலையம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் குப்பையை அள்ள நடவடிக்கை இல்லை. எனவே, குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் ஊராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்