SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்காணம் அருகே இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி இளைஞர்

2022-01-29@ 13:05:25

மரக்காணம்: நமது முன்னோர்கள் காலந்தொட்டு இயற்கையான முறையிலேயே விவசாயம் செய்து வந்தனர். இதுபோல் இயற்கையான முறையில் விவசாயம் செய்ததால் மண்வளம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை உணவை சாப்பிட்ட பொதுமக்களும் ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால் நவீன வளர்ச்சியால் பசுமை புரட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை விட்டு விட்டு ரசாயன மருந்து, கலப்பின விதை போன்றவற்றை செயற்கை முறையில் பயன்படுத்தினர்.

இதனால் மண்வளம், சுற்றுச்சூழல் போன்றவைகள் பாதிக்கப்பட்டது. மேலும் நமது பாரம்பரிய உணவு முறைகளை விட்டு விட்டு மேலைநாட்டு உணவுகளையே விரும்பி சாப்பிடும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் உடல்நிலையும் பாதிக்கும் அவலநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வருங்கால நம் சந்ததியினர் மண்வளம், இயற்கை சூழலை பயன்படுத்தும் வகையில் நமது அரசு இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சீத்தாராமன் தனது நிலத்தில் இயற்கை முறையில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்பு கவுனி போன்ற 8 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், மணிலா, காய்கறிகள் போன்றவைகளை நடவு செய்துள்ளார். இவர் நடவு செய்துள்ள பாரம்பரிய பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை கூட அவரே வீட்டில் இயற்கையான முறையில் தயாரித்து பயன்படுத்துகிறார்.

மேலும் தான் மட்டும் இயற்கை விவசாயம் செய்தால் போதாது என்று கருதி மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் எவ்வாறு செய்து அதில் லாபம் ஈட்டுவது என்பது குறித்து தனது நிலத்திலேயே பயிற்சியும் கொடுக்கிறார். இவர் இயற்கை விவசாயத்தின் மேல் வைத்துள்ள அதிகப்படியான ஆர்வத்தால் கோவா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கூட சென்று இயற்கை விவசாயம் எவ்வாறு செய்வது குறித்து பயிற்சியும் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்